‘மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி, ஆட்சியை கலைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்’ என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து கூறினார்.
இன்று மதியம் 2 மணி முதல் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் கோஷங்களுக்கு மத்தியில் பேசிய அவர், ’தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ். இதனால் எம்.ஜி.ஆரின் ஆன்மா வருத்தத்தில் இருக்கும். 386 சட்டப்பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளைக் கலைத்தது காங்கிரஸ் கட்சி. இதில் 50 முறை இந்திரா காந்தியே மாநில அரசுகளை கவிழ்த்திருப்பார்.
சரத் பவாரின் அரசும் கவிழ்ந்தது. என்டிஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது அவருக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம். அவருடைய அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
அப்படிப்பட்ட காங்கிரஸுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். இடதுசாரிகளும், திமுகவினரும் இதனை மறக்கக்கூடாது’ என்று ஆவேசமாகக் கூறினார்.
பிரியா