கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளைக் கவனித்து வந்த முதல்வர் ஸ்டாலினுக்குக் கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வீட்டுத் தனிமையிலிருந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அப்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர், குணமடைந்து வருவதாகக் கூறினார்.
மேலும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 28ஆம் தேதி தொடங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நேரில் அழைக்க வரமுடியவில்லை. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை நேரில் அனுப்பி வைக்கிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்று தொலைபேசியிலேயே அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பிரியா