சாம்பியன்களை உருவாக்கும் நிலம் தமிழ்நாடு என்று பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “விளையாட்டைப் பொறுத்தவரை இந்தியா 2024-ஆம் ஆண்டை தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும். Tamil Nadu the Land of Champions
இங்கு கூடியிருக்கும் எனது இளம் நண்பர்கள் இளம் இந்தியாவை, புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். உங்கள் ஆற்றல் மற்றும் உற்சாகம் நமது நாட்டை விளையாட்டு உலகில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
நாடு முழுவதிலுமிருந்து சென்னை வந்துள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஒன்றிணைந்து நீங்கள் அனைவரும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.
தமிழ்நாட்டின் அன்பான மக்கள், அழகான தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் நிச்சயமாக ஒரு சிறந்த அனுபவத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். அவர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நிச்சயமாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பை வழங்கும். மேலும், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் புதிய நட்புக்களை உருவாக்க இது உங்களுக்கு உதவும்.
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் பல திட்டங்களின் தொடக்கத்தோடு அடிக்கல்லும் இன்று இங்கு நாட்டப்பட உள்ளது.
1975-ல் ஒளிப்பரப்பை துவங்கிய சென்னை தொலைக்காட்சி நிலையம் இன்று முதல் ஒரு புதிய பயணத்தை துவங்குகிறது. இன்று டிடி தமிழ் சேனலும் ஒரு புதிய தோற்றத்தில் இங்கு தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் விளையாட்டுகளின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. சாம்பியன்களை உருவாக்கும் நிலம் இது.
இந்த நிலம் டென்னிசில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய அமிர்தராஜ் சகோதரர்களை உருவாக்கியது.
இந்த மாநிலத்திலிருந்து ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரன் உருவெடுத்தார். அவரது தலைமையில் இந்தியா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது.
சதுரங்க வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் ஆகியோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இதுபோன்ற பல வீரர்கள் தமிழகத்திலிருந்து உருவாகி ஒவ்வொரு விளையாட்டிலும் அதிசயங்களை செய்துள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் இந்த மண் ஒரு உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: விவாதிக்கப்போவது என்ன?
விடாமுயற்சி: அஜித் கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?
Tamil Nadu the Land of Champions