“அடுத்த 100 நாட்கள்”: பாஜகவினருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!

அரசியல் இந்தியா

அடுத்த 100 நாட்கள் பாஜக நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய நிர்வாகக் குழு மற்றும் அனைத்து மாநில பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது,

“பாஜக நிர்வாகிகள் 24 மணி நேரமும் நாட்டிற்கு சேவை செய்வதற்காக வேலை செய்கிறார்கள். அதேபோல், அடுத்த 100 நாட்கள் கூடுதல் உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும்.

இன்று பிப்ரவரி 18-ஆம் தேதி. 18 வயதை பூர்த்தி செய்த இளைஞர்கள் நாட்டின் 18-வது மக்களவையை தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்த 100 நாட்களில், ஒவ்வொரு புதிய வாக்காளர்களையும், பயனாளிகளையும், ஒவ்வொரு சமூகத்தையும் நாம் அனைவரும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால், பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெரிய பாய்ச்சலை சந்திக்கும். அனைத்து இலக்குகளையும் இந்தியா அடைய வேண்டும் என்றால் பாஜக வெற்றி பெற வேண்டும்.

நீங்கள் சாதித்துவிட்டீர்கள். அனைத்து முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டீர்கள், பிறகு ஏன் இவ்வளவு வேலை செய்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

10 வருட பாஜக ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்தது எளிதான காரியம் அல்ல. கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள், இளைஞர்களின் கனவு என்பது மோடியின் கனவாகும்.

ஊழல் மற்றும் பயங்கரவாத தாக்குதல் இல்லாத நாடாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளோம் என்றும் ஒட்டுமொத்த தேசமும் பாஜகவை நம்புகிறது” என்று மோடி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் இரட்டை சதம் : பேட்டால் மாயாஜாலம் காட்டிய ஜெய்ஸ்வால்

’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *