“மணிப்பூர் சம்பவம் நாகரிக சமுதாயத்திற்கு வெட்கக்கேடு” – பிரதமர் மோடி
மணிப்பூரில் நடந்த சம்பவம் நாகரிக சமுதாயத்திற்கு வெட்கக்கேடாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “என் இதயம் வலியாலும் கோபத்தாலும் கனத்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவம் எந்த நாகரிக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடாகும். அனைத்து மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் எவரும் தப்பமாட்டார் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் கடமையை நிறைவேற்றும். மணிப்பூர் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணம்
கச்சத்தீவு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!