முதல்கட்ட வாக்குப்பதிவு: மோடி ரியாக்‌ஷன்!

அரசியல்

இந்தியாவில் 18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை 69.46 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “முதல்கட்ட வாக்குப்பதிவில் என்டிஏ கூட்டணிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

இந்தியா முழுவதும் என்டிஏ கூட்டணிக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, இன்று கர்நாடகா மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சிறப்பு விமானம் மூலம் இன்று கர்நாடகம் வரும் பிரதமர் மோடி, மதியம் 2 மணிக்கு சிக்கபள்ளபுர் தொகுதியில் முன்னாள் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொன் ஒன்று கண்டேன்: விமர்சனம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *