ரூ.120 லட்சம் கோடி… தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதி : பிரதமர் பேச்சு!

Published On:

| By Kavi

pm modi says 120 crore lakhs spend for state development

pm modi says 120 crore lakhs spend for state development

தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்துள்ளார். திருச்சியில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் பின் பேசிய பிரதமர் மோடி, “இன்று மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது.

2014ஆம் ஆண்டுக்கு முன்னதான 10 ஆண்டுகளில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி நிதி கொடுத்தது. 2014ஆம் ஆண்டுக்கு பின் நமது ஆட்சியில், இந்த 10 ஆண்டுகளில் 120 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம்.

2014க்கு முன் தமிழ்நாடு பெற்ற நிதியை காட்டிலும் அதை விட 2.5 மடங்குக்கு அதிகமாக மத்திய அரசு கொடுத்திருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.

அதனால்தான் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.

ரயில்வே துறையை நவீனமயமாக்க முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் 2.5 மடங்குக்கு அதிகமாக செலவு செய்து வருகிறது.

இன்று தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இதுபோன்று கான்கிரீட் வீடு, கழிப்பறை வசதி, குடிநீர், எரிவாயு இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழ்நாடு மக்களுக்காக செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வரும் நிலையில், வரலாறு காணாத நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

“ப்ளீஸ் அதை திருப்பி கொடுத்துவிடு”: முகம் தெரியாத திருடனிடம் கெஞ்சும் வார்னர்

40 மத்திய அமைச்சர்கள் 400 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் : மோடி

pm modi says 120 crore lakhs spend for state development

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel