கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 15) பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் தனது கட்சியை இணைத்துக்கொண்ட சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது,
நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். நம் தமிழக மக்களும் இப்போது அதைத் தான் செய்யப்போகிறார்கள்.
திமுக, காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்படும். தமிழகத்தில் அவர்களின் வெற்றி என்ற தலைக்கனம் முற்றிலுமாக அழிக்கப்படும்.
இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. அவர்களது வரலாற்றில் வெறும் மோசடியும், ஊழலும் முதன்மையாக இருக்கும்.
அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது ஒற்றை இலக்கு. பாஜக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆர்ட்டிகள் பைபர் மற்றும் 5ஜி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை பாஜக கொண்டு வந்தது. ஆனால், இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.
2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது இந்தியா கூட்டணி தான். ஏராளமான விமான நிலையங்களை பாஜக கொண்டு வந்தது, ஆனால், இந்தியா கூட்டணி பெயரில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் உள்ளது.
கேலோ இந்தியா மூலம் விளையாட்டுத்துறையை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால், அவர்கள் பெயரில் காமன் வெல்த் போட்டி ஊழல் தான் முதன்மையாக உள்ளது.
கனிமவளத்துறையில் நாம் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள நிலையில், அவர்கள் பெயரில் நிலக்கரி ஊழல் தான் உள்ளது. இந்த பட்டியல் மிக நீளமாக போய்க்கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: அதிக வெற்றிகளுடன் ‘முதலிடம்’ வகிக்கும் அணி எது?
தேர்தல் பத்திரம் வழக்கு: எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Comments are closed.