ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு புதிய முனையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கார் மூலமாக சென்று கோவை சென்னை வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார்.
பின்னர் சென்ட்ரலில் இருந்து கார் மூலமாக காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு வந்து ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
செல்வம்