போர் பதற்றம்… இஸ்ரேல் பிரதமருக்கு மோடி வைத்த டிமாண்ட்!

Published On:

| By Selvam

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் நேற்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (ஆகஸ்ட் 16) பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தனர்.

மேலும், போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும், அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளையும் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

தற்போதைய மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில், விரைவில்  அமைதித் தீர்வு காண வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இருதலைவர்களும், பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். தொடர்ந்து தொடர்பில் இருப்பதெனவும் இருதலைவர்களும் ஒப்புகொண்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வளரும் இசைக் கலைஞர்களுக்காக… ச.நா தொடங்கிய ‘ரகிடா’

மெட்ரோவுக்கு பூஜ்ஜியம்…. ரயில்வேக்கு ஆயிரம்… மத்திய அரசை சாடிய டி.ஆர்.பாலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel