பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 14) ஒரு கன்று குட்டியை கொஞ்சுவது போல வீடியோ வெளியானது. அந்த கன்று குட்டி எங்கிருந்து வந்தது என்று பலரும் அறிய முற்பட்டுள்ளனர்.
விஷயம் இதுதான் … டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசு மாடு இன்று கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. இந்த கன்றுக்குட்டி பிறந்ததை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
கன்றுகுட்டியை தூக்கியபடி பிரதமர் இல்லத்தில் நடந்து வருகிறார் மோடி. பின்னர், அதை வீட்டின் உள்ளே கொண்டு சென்றார். பூஜை அறையில், துர்காதேவி சிலைக்கு முன்பு புதியதாக பிறந்த கன்றுக்குட்டிக்கு மாலையிட்டு பொன்னாடை போர்த்தினார்.
பின்னர், அந்த கன்றுக்குட்டியை தூக்கி கொஞ்சி விளையாடினார். பதிலுக்கு அந்த கன்று குட்டியும் மோடிக்கு முத்தமிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் வருகை தந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்த கன்றுகுட்டிக்கு “தீபஜோதி” என்று பிரதமர் பெயரிட்டுள்ளார்.
கன்றுகுட்டியின் நெற்றியில் வெள்ளை நிறத்தில் கோடு இருப்பதால், பிரதமர் ஒளியை குறிப்பிடும் வகையில் தீப ஜோதி என்று பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ராமேஸ்வரம் டூ தலைமன்னார்: கோவா கூட்டத்தில் முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் எ.வ.வேலு
சத்தமே இல்லாமல் நல்ல காரியம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்க மனசு