கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று (மே 30) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பகவதி அம்மன் கோவிலில் 20 நிமிடங்கள் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து கார் மூலம் படகு முகாம் அமைந்திருக்கூடிய பகுதிக்கு வந்தார். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த விவேகானந்தா படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார்.
மண்டபத்தில் விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார்.
ஜூன் 1-ஆம் தேதி மாலை 3 மணியளவில் மோடி தனது தியானத்தை நிறைவு செய்கிறார். 3. 25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கருடன்’, ‘கல்கி’ அனிமேஷன் சீரிஸ்… இந்த வார தியேட்டர் ஓடிடி லிஸ்ட் இதோ!