மீண்டும் தமிழகம் வரும் மோடி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-ஆம் கட்ட தேர்தலானது ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பின்னர் அடுத்தடுத்த மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிஸியானார்.

இந்தநிலையில், அனைத்து கட்ட தேர்தல்களும் இன்னும் சில தினங்களில் நிறைவு பெற உள்ள நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 30-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, அன்று பிற்பகல் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியானம் செய்ய உள்ளார்.

தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி தியானத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி கன்னியாமரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் இன்று போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் விவேகானந்தர் பாறை அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குரூப் 4 ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

சாமான்யன் – சாதித்தாரா? ராமராஜனின் புதிய பட வசூல் எவ்வளவு?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts