மரத்தடியில் மாணவர்களுடன் உரையாடிய மோடி : என்ன சொன்னார் தெரியுமா?

Published On:

| By Kavi

டெல்லியில் மாணவர்களுடன் மரத்தடியில் அமர்ந்து பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.M Modi interacts with students

நாளை மறுநாள் டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், டெல்லியை கைப்பற்ற காங்கிரஸும், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கால் பதிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அனல் பறந்த பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கடைசி நாளான இன்று (பிப்ரவரி 3) பிரதமர் மோடி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

டெல்லியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மரத்தடியில் மோடி PM Modi interacts with students

அதில், “டெல்லியில் பள்ளி மாணவர்களை 9ஆம் வகுப்புக்கு மேல் அவர்கள் (ஆம் ஆத்மி அரசாங்கம்) படிக்க விடுவதில்லை என்று கேள்விப்பட்டேன். நிச்சயம் தேர்ச்சி பெறுவார்கள் என்று உறுதியான குழந்தைகள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். காரணம் என்னவென்றால், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அரசுக்கு கெட்டப்பெயர் வந்துவிடும் என நினைத்து மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுகிறார்கள். மிகவும் நேர்மையற்ற வேலையை செய்கின்றனர்” என்று ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டி மாணவர்களிடம் கூறுகிறார்.

முன்னதாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வந்தால், போட்டித் தேர்வு எழுத விரும்புவோருக்கு ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படும்.

ஏழை மாணவர்களுக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி உறுதி செய்யப்படும்.

ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பட்டியலின மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக இலவச கல்வியை நிறுத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார். டெல்லி கல்வி மாடலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டினர்.

அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது, ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரைPM Modi interacts with students

2020ஆம் ஆண்டு டெல்லி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா, டெல்லி அரசு பள்ளியில் மகிழ்ச்சியான வகுப்பறையில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை 2022ஆம் ஆண்டு ஆய்வு செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லி மாதிரிப் பள்ளியை போல தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. PM Modi interacts with students

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share