பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக மூன்று நாள் பயணமாக இன்று (மே 30) மாலை கன்னியாகுமரி வருகை தருகிறார்.
அவரது வருகைக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் இல்லத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெலிபேட் மற்றும் கிரீன் ரூம் எனப்படும் தற்காலிக ஓய்வு அறைப் பகுதியில் டிஐஜி அபினவ் குமார் தலைமையில் துணை ஆணையர் ராஜாராம், கேம்ப் காமாண்டெண்ட் கார்த்திகேயன், ஏடிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிபேடிலிருந்து பிரதமர் மோடி செல்லும் கான்வாயில் எஸ்.பி. அரவிந்த், உளுந்தூர்பேட்டை பட்டாலியன் கமாண்டர் ஆனந்தன் மற்றும் நான்கு டி.எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிபேடின் வெளிப்புற பாதுகாப்புப் பணியில் எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி கருப்பையா, 3 டி.எஸ்.பி மற்றும் 8 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல உள்ளதால் அந்த பகுதியில் டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில், துணை ஆணையர் கீதா, ஒரு ஏ.டி.எஸ்.பி, ஒரு டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 டீம்கள் பாதுகாப்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகின் பாதுகாப்புப் பணியில் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி, ஒரு டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 டீம்கள் ஈடுபட்டுள்ளனர்.
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இரண்டு இடங்களிலும் பிரதீப், சுரேஷ்குமார் ஆகிய 2 எஸ்.பிக்கள் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி மற்றும் 4 இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 டீம்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
நீச்சல் வீரர்கள் 10 பேர் மற்றும் கடல் நீரில் குதிக்கும் டைவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் 10 பேரும் பணியில் உள்ளனர்.
டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ஐ.ஜி.கண்ணன் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 13 எஸ்.பி, 16 ஏ.டி.எஸ்.பி, 45 டி.எஸ்.பி மற்றும் 64 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான டீம் உட்பட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
1 கோடி சம்பளம் ட்ரெண்ட் செட் முதல் ’வாம்மா மின்னல்’ காமெடி வரை… யார் இந்த சூர்ய பிரகாஷ்?
கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: ஐசியூவாக மாறிய அரசு பேருந்து!