குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!

Published On:

| By Kavi

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், வாரணாசி தொகுதியில் இன்று காலை பின்னடைவைச் சந்தித்தார் பிரதமர் மோடி. பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வந்தார்.

இந்தநிலையில் 612970 வாக்குகளை பெற்ற மோடி, 152513 வாக்கு வித்தியாசத்தில் அஜய் ராயை தோற்கடித்துள்ளார். அஜய் ராய் 460457 வாக்குகளை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். 2019ல் 674,664 வாக்குகள் பெற்றிருந்தார்.

2019 தேர்தலில் 5,22,116 வாக்கு வித்தியாசத்தில் அஜய் ராயை தோற்கடித்தார்.

ஆனால் இந்த தேர்தலில் வாக்குவித்தியாசம் குறைந்துள்ளது. வெறும் 152513 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோற்கடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கருத்து கணிப்பு தவறானதால் கண்ணீர் விட்ட பிரதீப் குப்தா

ரேபரேலி… சோனியாவின் மார்ஜினை முறியடித்த ராகுல்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share