நாகாலாந்து, திரிபுரா தேர்தல் முடிவுகளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (மார்ச் 2) இரவு 7 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ.க கூட்டணி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதனையடுத்து சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அங்கு திரிபுரா, நாகாலாந்தில் பாஜகவின் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கிறார்.
அதன்பின்னர் முக்கிய அறிவிப்பாக தேர்தலில் வென்ற இரு மாநிலங்களிலும் அடுத்த முதல்வர் யார் என்பதை அவர் அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
“இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”: முதல்வர்