கோவை பாட்டியின் காலில் விழுந்த பிரதமர் மோடி

அரசியல்

சர்வதேச சிறுதானிய மாநாட்டில் கலந்து கொண்ட கோவை பாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனையடுத்து, டெல்லியில் 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடும் வகையில், உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டுக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கயானா, மொரிஷியஸ், இலங்கை, சூடான், சுரினாம், ஜாம்பியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் காம்பியா,மாலத்தீவுகள், நைஜீரியா ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட வட்ட மேசை கருத்தரங்கும் நடைபெற்றது.

அப்போது பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா 13.71 முதல் 18.02 மில்லியன் டன்கள் வரை சிறுதானிய தினைகளை உற்பத்தி செய்துள்ளது. 2018-19 முதல். 2022-23 வரை ரூ. 365.85 கோடி மதிப்புள்ள 1,04,146 மெட்ரிக் டன் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்துள்ளது” என்றார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கோவையைச் சேர்ந்த இயற்கை விவசாயியான 107 வயது பாப்பம்மாளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். பிரதமர் மோடிக்குச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பாப்பம்மாள் பாட்டி. அப்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி.

107 வயதிலும் மருந்து தெளிக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள் பாட்டி. 100 வயதைக் கடந்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருப்பதால் இவருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

”நாட்டு நாட்டு” ஆட்டம் போட்ட பிரபுதேவா

தலைமை தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் முறையீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.