Pm Modi condemns dmk

திமுக விளம்பரத்தில் சீனா கொடி: பிரதமர் மோடி காட்டம்!

அரசியல்

குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) தொடங்கி வைத்தார். Pm Modi condemns dmk

இந்த நிகழ்ச்சி தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரத்தில்,

சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம் இடம்பெற்றிருந்தது. மேலும், அந்த விளம்பரத்தில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரது படங்களுடம் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது

, “குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினேன். இதுதொடர்பாக திமுக கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில், சீனாவின் கொடியுடன் ராக்கெட் படத்தை போட்டிருக்கிறார்கள்.

அந்தளவிற்கு தான் இந்தியா மீது அவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறது. இந்தியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றை இதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்தில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பு மற்றும் நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதை வெளிப்படுத்துகிறது.

குலசேகரன் பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஊழல் கட்சியான திமுக ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

திமுக தங்களது விரக்தியால் கடந்தகால தவறுகளை மறைக்கும் முயற்சியில் தான் கவனம் செலுத்தி வருகிறது. சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று தமிழ்நாட்டில் இல்லாமல், ஆந்திராவில் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை நாம் நினைவூட்ட வேண்டும்.

இஸ்ரோவின் முதல் ஏவுதளம் அமைக்க கருத்தாக்கம் மேற்கொண்டபோது, முதல் தேர்வாக தமிழகம் தான் இருந்தது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில், கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், முன்னாள் முதல்வர் அண்ணா தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பினார்.

இஸ்ரோ அதிகாரிகள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இறுதியாக மதியழகன் அந்த திட்டத்துடன் ஒத்துப்போகவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு விண்வெளி திட்டம் வராமல் திமுக இப்படி தான் தடுத்தது. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்: மோடி தாக்கு!

Pm Modi condemns dmk

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *