ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் தேசியக்கொடியை டிபியாக மாற்றியுள்ளார்.
78-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. அனைவரது வீடுகளிலும் இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆகஸ்ட் 15 வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை டிபியாக மாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கியுள்ள வேளையில், ஹர்கர்திரங்கா பிரச்சாரத்தை வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். நான் எனது டிபியில் தேசியக்கொடியை மாற்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களது டிபியில் தேசிய கொடி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உங்கள் செல்ஃபிக்களை https://harghartiranga.com என்ற வலைதள பக்கத்தில் பகிருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹர்கர்திரங்கா பிரச்சாரம் என்பது சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் தேசியக்கொடி ஆகியவற்றை நினைவு கூருவதாகும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மில்லியன் இதயங்களை வென்றுள்ளார்… வினேஷ் போகத்துக்கு சப்போர்ட் செய்த யுவன்
ஒலிம்பிக்: வச்ச குறி தப்பாது… ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா