இமாச்சல் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 12) தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய லெப்சாவில் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி மகிழ்ந்தார். மேலும் அவர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது பாதுகாப்பு படையினரின் தைரியம் அசைக்க முடியாதது. இந்த கடினமாக நிலப்பரப்புகளில் அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி தியாகம் மற்றும் அர்ப்பணிப்பால் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.
தைரியம் மற்றும் துணிச்சலின் உருவகமாக இருக்கும் ஹீரோக்களுக்கு இந்தியா எப்பொழுதும் நன்றியுடன் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!