தங்களது பிறந்தநாளை இன்று (மார்ச் 1) கொண்டாடும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதேபோல இன்று தனது 72 பிறந்தநாளை கொண்டாடும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ”பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
3வது டெஸ்ட்: கே.எல். ராகுல் வெளியே… சுப்மன் கில் உள்ளே!