ராகுல்காந்தியை நேரிடையாக தாக்கிய மோடி
“காங்கிரஸ் தலைவரின் துவக்கம் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போது, அவர் தனது விரக்தியை நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்கிறார்” என்று ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர் மவுனம் சாதித்த நிலையில் அவரது மவுனத்தை உடைப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
அதன் மீது மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில் பதில் அளிப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் மக்களவைக்கு வந்தார்.
தொடர்ந்து 5 மணியளவில் அவர் பேச ஆரம்பித்தார். சுமார் 2 மணி நேரமாக பேசிய மோடி சுமார் ஒன்றரை மணி நேரமாக மணிப்பூர் குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த I.N.D.I.A எதிர்க்கட்சிகள் கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து பேசிய பிரதமர் மோடி, “’காங்கிரஸ் தலைவரின் துவக்கம் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போது, அவர் தனது விரக்தியை நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்கிறார்” என்று விமர்சித்தார்.
மேலும், ’பாரத மாதா’ கருத்துக்காகவும், ராகுல் காந்தியை விமர்சித்தார்.
அவர், “பாரத மாதாவின் மரணத்தை சிலர் ஏன் கற்பனை செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகப்பெரும் அவமதிப்பு” என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
நேற்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, ”மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள், உங்கள் அரசியல் மணிப்பூரை கொன்றுவிட்டது.
நீங்கள் பாரத மாதாவை மீட்பவர்கள் அல்ல, பாரத மாதாவை கொன்றவர்கள்” என்று கடுமையாக மத்திய, மாநில பா. ஜ. க அரசை குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ், திமுகவை விமர்சித்த மோடி
அமித்ஷா ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார்: மணிப்பூர் குறித்து பிரதமர்
இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாத பிரதமர்… எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!