தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

அரசியல்

இன்று (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி :

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை பிரகாசமானது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். அனைவரும் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்.

திரவுபதி முர்மு :

இந்த நன்னாளில் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம். தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவ பிரார்த்திக்கிறேன்.

pm modi and tamilnadu leaders diwali wishes

ஆளுநர் ஆர்.என்.ரவி :

ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச்செய்வதில் இத்திருநாள் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி நம் அன்புக்குரியவர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி :

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாக மக்களால் கருதப்படுகிறது. மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர் செல்வம் :

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நன்னாளில் தனிமனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மத்திய இணையமைச்சர், எல்.முருகன் :

மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், கே.எஸ்.அழகிரி ;

தீபாவளித் திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைந்து, இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். நாட்டில் அதர்மம் அழிந்து, தர்மம் நிலைக்க இந்த தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைய வேண்டும்.

pm modi and tamilnadu leaders diwali wishes

பாமக நிறுவனர், ராமதாஸ்;

மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

சத்குரு ஜகி வாசுதேவ்

உங்கள் வாழ்வில் உள்ளும் புறமும் ஒளிமயமாகட்டும். உயிரின் ஒளியும் அதன் சாத்தியங்களும் நம் மீதும் நம் சந்ததியினர் மீதும் பிரகாசிப்பதை உறுதிப்படுத்த மண் இன்றியமையாதது. மண் காப்போம். அன்பும் அருளும்.

செல்வம்

அன்றும் இன்றும்… நினைவில் நிற்கப்போவது படத்தின் வசூலா? படத்தின் தரமா?

தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *