மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) மாரடைப்பால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அறிவு விதைகளை விதைத்தார்!
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.
மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தார். அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் இரங்கல்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.
இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மனித குல சேவையில் அயராத ஈடுபாடு!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில்,
“ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.
அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தர வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆசிரியர் முதல் ஆன்மீக அம்மா வரை! யார் இந்த பங்காரு அடிகளார்?
ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது!
ஒன்ப்ளஸின் முதல் ஃபோல்டு போன்: விலை எவ்வளவு தெரியுமா?