தமிழக மக்களையும் தமிழ் மொழியையும் நேசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “ராமகிருஷ்ண மடத்தை நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் ராமகிருஷ்ண மடம் முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ் மக்கள், மொழி கலாச்சாரத்தை நான் நேசிக்கிறேன். சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கி தான் தியானம் செய்தார். தமிழகத்தில் விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்றனர்.
எங்களுடைய அரசியல் தத்துவங்கள் சுவாமி விவேகானந்தரை பின்பற்றியுள்ளது. அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கினால் சமூகம் முன்னேறும். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெற்றி பெற்றதால் பலரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் அனைவரிடமும் கனிவாக இருக்க வேண்டும்.
இந்தியா அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கியது. முத்ரா யோஜனா திட்டம் இன்று 8-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் பலரும் பயனடைந்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம், வீடு, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவரையும் சென்றடைந்துள்ளது. விவேகானந்தர் இந்தியா குறித்த பெரிய இலக்கை கொண்டிருந்தார். அவரது இலக்கை நமது அரசு நிறைவேற்றி வருகிறது. தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நமது நாட்டின் பெண்கள் பல தடைகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.” என்றார்.
செல்வம்
ஜாக்டோ ஜியோவின் கோட்டை முற்றுகை ஒத்திவைப்பு!
மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!