திமுக ஆதரவில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: மோடி காட்டம்!

திமுக ஆதரவில் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையில்லாமல் அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்று மோடி இன்று (மார்ச் 4)  குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தாமரை மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது,

“குடும்ப அரசியல் பேசும் கட்சிகள் தங்கள் எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. ஆனால், நான் தேசத்தின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்படுகிறேன்.

இந்தியா கூட்டணி கட்சிகள் குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால், நான் தேசத்திற்கே முன்னுரிமை கொடுக்கிறேன். ஆகையால், இந்தியா கூட்டணி கட்சிகள் என்னை விமர்சிக்க ஒரு புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மோடிக்கு குடும்பம் இல்லாததால் தான் இப்படி பேசுகிறார் என்று கூறி வருகிறார்கள். எனக்கு 16 வயதான போது, நான் வீட்டை துறந்து இந்த தேசத்திற்காக வெளியேறினேன். பாரத நாட்டின் மக்கள் தான் எனது குடும்பம். ஆகையால் அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக்க இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணி கட்சிகளின் ஊழல் தலைவர்கள் பாதுகாக்கும் சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது,

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் கப்பல் கவிழ்ந்து விட்டது போல, தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஊழல் செய்வதை தவிர வேறு எதுவுமே தெரியாது.

இன்று வெளியாகியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தூய்மையான அரசியலுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும்.

திமுக குடும்பத்தின் ஒரு அமைச்சரிடம் உச்சநீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது என்பதை  இன்று நாம் பார்த்தோம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி அவமானம் செய்வதும் குடும்ப அரசியல் செய்பவர்களின் அடையாளம் தான். தங்களுடைய அதிகாரம், அகங்காரம், மமதை  காரணமாக மக்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காத ஒருவர் இன்னமும் கூட தமிழ்நாடு அரசின் முக்கிய பதவியில் இடம்பெற்றிருக்கிறார் என்பது கவலை அளிக்கும் விஷயம்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையில்லாமல் அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பது தான் என் மனதை அரித்தெடுக்கும் கவலை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த கவலை இருக்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்றைய குழந்தைகள் மட்டுமல்ல, நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழ்நாட்டின் எதிரிகளின் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘குக் வித் கோமாளி’க்கு குட்பை சொன்ன இயக்குநர்… நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறதா?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவவில்லை: மோடி குற்றச்சாட்டு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts