கடந்த 56 ஆண்டு காலத்தில் எந்த இந்திய பிரதமரும் சென்றிருக்காத கயானா நாட்டுக்கு விசிட் அடித்து மோடி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி இந்திய பிரதமர் ஆனார். அதற்கு பிறகு பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது, தென் அமெரிக்கா அருகிலுள்ள கரிபியன் நாடானா கயனாவுக்கும் விசிட் அடித்துள்ளார்.
கடந்த 56 ஆண்டுகளில் எந்த இந்திய பிரதமரும் இந்த நாட்டுக்கு சென்றதில்லை. இந்த குட்டி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5 சதவிகித மக்கள் இந்திய வம்சாவளி ஆகும். அதாவது, கிட்டத்தட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்திய வம்சாவளி மக்கள் ஆவார்கள். 185 ஆண்டுகளுக்கு முன்னரே லட்சக்கணக்கான இந்திய மக்கள் இந்த குட்டி நாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளனர். ‘
இதற்காக மட்டும் மோடி இந்த நாட்டுக்கு விசிட் அடிக்கவில்லை. இந்த நாட்டில் நல்ல எண்ணெய் வளம் உள்ளது. இந்தியாவுக்கு கயானா நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்தும் முக்கிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு, கயனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்கனவே பல ஒப்பந்தங்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் 228 டார்னியர் விமானங்களை தயாரித்து அந்த நாட்டு விமானப்படைக்கு வழங்கியுள்ளது. மேலும், இந்தியாவிடம் இருந்து ரேடார், பீரங்கிகள், ரோந்து வாகனங்களை வாங்கவும் கயனா முடிவு செய்துள்ளது. இந்த காரணங்களுக்காகவே மோடி கயனா நாட்டுக்கு விசிட் செய்துள்ளார்.
கயனா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் எக்ஸல்லன்ஸ்’ விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 19 நாடுகளின் உயரிய விருதுகளை இதுவரை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி இந்த மாநிலத்துக்காரரா?
இதுக்கு என்டே கிடையாதா? – மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!