நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 15) தேசிய கொடியேற்றினார்.
இந்தியா முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று காலை செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றி வரும் பிரதமர் மோடி இன்று 10-ஆவது முறையாக கொடி ஏற்றினார்.
குடியரசு தின விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
செல்வம்
இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!