pm modi 70 thousand appointment

70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய மோடி

அரசியல் இந்தியா

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி துவங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் 70 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் 44 இடங்களிலிருந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியபோது, “நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும் போது அரசு ஊழியர்களுக்கு பணி வழங்கும் வாய்ப்பு பெருமையாக உள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாட்டு மக்கள் அனைவரும் தீர்மானம் எடுத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை வங்கியில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியா வங்கி சேவையில் முன்னணியில் திகழ்கிறது.

நாம் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். முந்தைய அரசில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இல்லை. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மிக முக்கியமான வேலைகள் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா வரும் என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

செல்வம்

“மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்”- ஜெயக்குமார்

முதியோர் உதவி தொகை உயர்வு : அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0