ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து நேற்று (மார்ச் 25) தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 உட்பிரிவு 3-யை தவறாக பயன்படுத்தி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் அபா முரளிதரன் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சட்டப்பிரிவு 8(3) என்பது அரசியல் சாசனத்தினுடைய கொடிய சட்டமாகும். ஏனெனில் இது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் சுதந்திரமான பேச்சுரிமையை தடுக்கிறது. இதனால் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பிரிவு 8 (3)-ஐ ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!