மன்னிப்பா? மறுத்த கார்கே : பாஜக கடும் அமளி!

அரசியல்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்திய நிலையில் மாநிலங்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.

ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.

அப்போது நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பலரை தியாகம் செய்திருக்கிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கின்றனர். ஆனால் பா. ஜ. க யாரையும் இழக்கவில்லை.

பா. ஜ. க.வினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டிற்காக இறந்ததில்லை. ஆனால் அவர்கள் இன்னும் தங்களை தேச பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். அதோடு நாம் ஏதாவது சொன்னால்  தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள்.

சிங்கம் போல் பேசுவார்கள் ஆனால் எலி போல் செயல்படுவார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 20) மாநிலங்களவை கூடியவுடன் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக குரல் எழுப்பியது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நேற்று அல்வாரில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரிகமானது. ஆதாரமற்ற அவரது அநாகரிக பேச்சையும் நாட்டு மக்களிடையே பொய்கள் கூற முயற்சிப்பதையும் கண்டிக்கிறேன்.

நாடாளுமன்றத்திடமும் பாஜக விடமும் பெரும்பான்மையுடன் பாஜகவை தேர்ந்தெடுத்த மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

piyus goyal demand gharge apologies

பாஜக எம்,பி,களும் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே நான் என்னுடைய கருத்தை நாடாளுமன்ற அவைக்கு வெளியே கூறினேன். அவைக்கு வெளியே சம்பந்தப்பட்ட விஷயம் அது.. இது குறித்து எந்த விவாதமும் இங்கு தேவையில்லை.

நான் மீண்டும் கூறுகிறேன் சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. காங்கிரசில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள. நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், என்ன தியாகம் செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பியூஸ் கோயல், உங்கள் வரலாறு உங்களுக்கு நினைவில் இல்லை என்று நினைக்கிறேன்.

காங்கிரஸால் தான் ஜம்மு காஷ்மீருக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. சீனா ஆக்கிரமித்தது என காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.

இந்த சூழலில் அவையில் காங்கிரஸ், பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனிடையே அவைத்தலைவர் ஜெகதீப் தங்கார்,

“அந்தக் கருத்து அவைக்கு வெளியே சொல்லப்பட்டிருக்கிறது. 135 கோடி மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது” என எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடும் போது கூறினார்.

கார்கே கருத்து குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,

“ காங்கிரஸ் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது. கார்கேவுக்கு பொது அறிவு உள்ளது என்று நினைத்தேன். ஆனால் இல்லை என நிரூபணமாகியுள்ளது” என விமர்சித்தார்.

பிரியா

மோதிக்கொண்ட ஆசிரியர்கள்: தடுத்த சிறுவனை கொன்ற கொடூரம்!

புதிய வருவாய்த்துறை கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *