இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “செந்தில் பாலாஜி வசமிருந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அரசியலைமைப்பு சட்டத்தின் 164-வது பிரிவு ஆளுநரின் விருப்பத்தின் பேரில் தான் அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் என்று தெளிவாக கூறுகிறது.
ஆளுநரின் விருப்பத்திற்கு மாறாக அரசு எப்படி நீதிமன்ற காவலில் உள்ள ஒருவரை அமைச்சரவையில் இருக்க அனுமதிக்க முடியும். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது நியாமற்றது மற்றும் தேவையற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
நடிகர் பிரித்விராஜுக்கு இன்று அறுவை சிகிச்சை!
அமெரிக்கா, எகிப்து பயணங்கள்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி