ஒரு போட்டோ எடுத்துட்டு நடிக்கிறாங்க! பி.டிஉஷா மீது பாய்ந்த வினேஷ் போகத்

அரசியல் விளையாட்டு

பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து அதிக எடை காரணமாக இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும்  மேல்முறையீடு செய்தும் பலன் கிடைக்கவில்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத்தலைவர் பிடி உஷா அவருக்கு ஆறுதல் கூறுவது போன்ற புகைப்படத்தை தனது சமூகவலைத் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியா திரும்பிய வினேஷ்போகத்,  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.  ஹரியானா சட்டசபை தேர்தலில், ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.  வினேஷ் போகத் அரசியலில் குதித்தது அவரின் மாமாவும் பயிற்சியாளருமான மகாவீருக்கு பிடிக்கவில்லை. அரசியலில் இறங்கி அமைச்சராகி என்ன பயன் கிடைக்க போகிறது? ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா? என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வினேஷ் தன்னை தயார் படுத்தி கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே , பாரீஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா நடந்த கொண்ட விதம் குறித்து வினேஷ் போகத் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பாரீஸ் மருத்துவமனையில் இருந்த என்னை பி.டி.உஷா  சந்தித்தார். அப்போது எனக்கு தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல்தான், அங்கேயும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் நொந்து போனது.

எனக்கு ஆதரவு தருவது போல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி.உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்தார். பின்னர், சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ’நான் உங்களுடன் இருக்கிறேன்’ என தெரிவித்தார். எல்லாமே  அப்பட்டமான நடிப்பு” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மெஸ்சி வளர்க்கும் நாயின் விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!

”விவாகரத்து குறித்து என்னிடம் கேட்கவில்லை”: ஜெயம் ரவி மனைவி வேதனை!

 

 

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *