யூஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் இன்று (ஜூன் 23) நடத்த இருந்த முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.
இவை எப்போதோ ஏற்படும் அரிய நிகழ்வுகளாக இல்லாமல், திறமையற்ற மற்றும் உடைந்த மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து,
உயர்கல்விக்கான தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோர்ப்போம்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நீட், நெட் போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் நாடு முழுவதும் கடும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நாடு முழுவதும் நடைபெற இருந்த முதுநிலை ‘நீட்’ தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
10 நிமிடம் தாமதமாக வந்தால் அரைநாள் விடுமுறையா? : மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!
Comments are closed.