சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள் தொடர்ந்து அரசியல் அரங்கில் சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) பிற்பகல் 4 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ராஜ்பவன் வாசலில் இருக்கும் ஒன்றாம் எண் கேட் அருகே ஒருவர் வந்திருக்கிறார்.
பாதுகாப்பு போலீஸார் நின்று கொண்டிருந்தபோதே திடீரென தன் கையில் இருந்த பெட்ரோல் குண்டை அவர் எடுத்துவீச அது கேட் அருகே சென்று விழுந்தது. உடனே பதறிப் போன போலீஸார் அந்த நபரை பிடித்துச் சென்று விசாரித்தனர்.
அப்போதுதான் அவர் சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி கருக்கா வினோத் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2021 இல் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வீசியிருக்கிறார், அதன் பின் பாஜக அலுவலக கமலாலயத்தில் வெடிகுண்டு வீசியிருக்கிறார்.
அந்த கருக்கா வினோத் தான் இன்று பாதுகாப்பு போலீஸார் இருக்கும்போதே நடந்து வந்து ஆளுநர் மாளிகை முன் வெடிகுண்டை வீசியிருக்கிறார் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்: என்சிஇஆர்டி பரிந்துரை!