கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சித்தாப்புதூரில் பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 22) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி சென்றுள்ளனர்.
பெரிய அளவில் அது வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து பாஜகவினர் அலுவலகத்தை நோக்கித் திரண்டு வருகிறார்கள். பாஜகவின் தேசிய தலைவர் நட்டா மதுரைக்கு வந்திருப்பதால், கோவை பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கோவையைச் சேர்ந்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நட்டாவின் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபோல், 2018ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருந்தனர். தற்போதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை:சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்! சபரீசன் வைக்கும் புது செக்!
Comments are closed.