“மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களின் உரிமை பறிபோகும்”: கலாநிதி வீராசாமி

Published On:

| By Kavi

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தலைக் கொண்டு வந்து மக்களின் உரிமைகளைப் பறித்துவிடுவார் என்று கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.

வட சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று (ஏப்ரல் 1) திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வார்டு 1, 2, 4 ஆகிய வட்டங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்களைச் சந்தித்து திமுகவின் வாக்குறுதி மற்றும் இதுவரை திமுக அரசு செய்த திட்டங்களைச் சொல்லி வாக்குச் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அவர், “ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயல்படுவதுதான் திமுக. மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தலைக் கொண்டு வந்து மக்களின் உரிமைகளைப் பறித்துவிடுவார்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், “முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தியுள்ளார். முக்கியமாக மகளிர் உரிமை தொகை, அரசு உதவி பெறும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களுக்குக் காலை உணவு உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

மேலும் வடசென்னை பகுதியில் இதுவரை செய்யப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றைக் கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கலாநிதி வீராசாமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்த சீனா!

”அரசியல் கட்சிகள் மீது கெடுபிடி கூடாது” : ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel