“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” -ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி!

அரசியல்

அரசை கேவலப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஏதேதோ சொல்வார்கள் ஆனால் மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாதிப்புகளை அறிந்த உடனே நேற்று முன்தினமே செந்தில் பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய 3 அமைச்சர்களையும், இங்கிருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.

அவர்கள் மட்டும் இருந்தால் போதாது என்பதற்காக நானும் நேரில் வரவேண்டும் என்ற முடிவோடு நேற்று இரவோடு இரவாக வந்து பாண்டிச்சேரியில் தங்கி காலையில் 7.30 மணிக்கு எழுந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டு இருக்கிறேன்.

பணிகள் திருப்திகரமாக உள்ளன. மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் சில குறைகள் இருக்கின்றன. இன்னும் 5, 6 நாட்களுக்குள் அதையும் தீர்த்து வைத்துவிடுவோம்” என்றார்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவற்றை எல்லாம் கணக்கெடுக்கச் சொல்லியிருக்கிறோம்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்காகவே, கேவலப்படுத்துவதற்காக, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக, ஏதேதோ சொல்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கு ஏற்றபடி கணக்கெடுக்கப்பட்டு அந்த அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்” என்று பதிலளித்தார்.

கலை.ரா

நீரில் மூழ்கிய பயிர்கள்: சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வு!

கணவரை சந்திக்க சென்ற நளினி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *