பேனா நினைவு சின்னம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இதனையொட்டி பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி நடைபெற்றது.
அதில் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் , கருத்துக் கேட்பு கூட்ட நிகழ்வுகள் தொடர்பாக குறிப்புகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 34 பேரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்ட நிகழ்வு அறிக்கையின்படி பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்
மு.வா.ஜெகதீஸ் குமார்
அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!
மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
ஹோம் டூரில் சிக்கிய கிளிகள்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்!
டிஜிட்டல் திண்ணை: டேட்டா ஷீட்…எடப்பாடி டெபாசிட்… ஸ்டாலின் போன் கால்- ஈரோடு ஹாட்!