ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு இன்று(மே 25) வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று உத்தரப் பிரதேசம், பிகார், டெல்லி, காஷ்மீர் என 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் தொகுதியில் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் எந்த காரணமும் இன்றி மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பூத் நிர்வாகிகளை போலீசார் கைது செய்வதாக கூறி பிஜ்பேகரா காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மெகபூபா முப்தி.
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முப்தியின் தர்ணா போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிடிபி கட்சியினர் எந்த காரணமும் இல்லாமல் காவல் நிலையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு அளிப்பதற்கு முன்னதாகவே எங்கள் வாக்குச்சாவடி முகவர்களை காவல் நிலையங்களில் அடைத்து வைத்துள்ளனர். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் என்ன நடக்கிறது. இவிஎம்-ல் முறைகேடு செய்ய முயற்சிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் மக்களவை செல்வதில் அவ்வளவு பயமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது செல்போனில் இருந்து நேற்று மாலை முதல் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை, அவுட்கோயிங் கால் கட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே 7 ஆம் தேதி காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதன்பின் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவுன்னு பாருங்க!
சீரியஸ் விமல், ஜாலி கருணாஸ்… “போகுமிடம் வெகு தூரமில்லை” டிரைலர் எப்படி..?