பாஜகவிடம் பணம் பெற்றுக் கொண்டு பி அணியாக செயல்படுவதாக ஆந்திராவை ஆளும் ஜெகன் மோகன் கட்சியினர் குற்றம்சாட்டிய நிலையில், இனிமேல் யாரேனும் விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன் என ஆளுங்கட்சியினருக்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் பி டீம் ஆக நடிகர் பவன் கல்யாண் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னுடைய கட்சியை நடத்தி வருவதாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே இன்று (அக்டோபர் 18 ) அவர் உரையாற்றினார்.
அப்போது திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை உயர்த்தி காட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு மற்ற கட்சிகளிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் கட்சி நடத்துகிறேன் என்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்.
மேலும், தனது பொறுமைதான் தன்னை எல்லா நேரத்திலும் காப்பாற்றியது என்றும் நான் ஸ்கார்பியோ கார் வாங்கியபோது,
பணம் கொடுத்தது யார் என்று கேட்டார்கள். கடந்த எட்டு வருடங்களில் ஆறு படங்கள் நடித்துள்ளேன்.
100 கோடி ரூபாய் முதல் 120 கோடி ரூபாய் வரை சம்பாதித்து, 33 கோடி ரூபாய் வரை வரி கட்டினேன்.
எனது குழந்தைகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டை நன்கொடையாகக் கொடுத்தேன்.
இரு மாநிலங்களிலும் (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா) முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக நான் ரூ.12 கோடியும், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு ரூ.30 லட்சமும் அளித்துள்ளேன்,” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நீங்க எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துறீங்க ? ராகுல் சொன்ன நச் பதில்!
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை! கண்ணீர் விட்ட அசீம்