சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ‘நரசிம்ம வாராஹி படை’ என்கிற பிரிவைத் தனது ஜன சேனா கட்சியில் உருவாக்கியிருப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் துணை முதல்வராக பதவியேற்றது முதல் சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய போது, தொண்டர்கள் முன்னிலையில் பேசிய பவன் கல்யாண் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் அழிந்து போய்விடுவார்கள் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் “இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள பிரச்சினைகளை விசாரிப்பதற்கு ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
நாம் அனைவரும் ஒன்று கூடி ‘சனாதன தர்மம்’ அவமதிக்கப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், நேற்று(நவம்பர் 2), ஆந்திரப் பிரதேச மாநிலம், எலூரு மாவட்டத்தில் பேசிய அவர், ”சனாதன தர்மத்தைப் பாதுகாக்க, தனது ஜன சேனா கட்சியில் ‘நரசிம்ம வராஹி கனம்’ என்கிற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
மேலும், “நான் எல்லா மதங்களையும் மதிக்கிறவன். ஆனால் எனக்கு என் மதம்தான் முக்கியம். சனாதன தர்மத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் அல்லது நேரில் தரக்குறைவாகப் பேசுபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ராசேந்திரன் தேர்வு!
”சீமான் கருத்தை மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” : தவெக நிர்வாகி பதில்!
இணைய அச்சுறுத்தல் ‘எதிரிகள்’ பட்டியலில் இந்தியா!
Comments are closed.