பாட்டாளி மாடல்: அன்புமணியின் புது முழக்கம்! 

அரசியல்

திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அதற்கு போட்டியாக பாட்டாளி மாடல் என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் பாமக  தலைவர் அன்புமணி.

பாமக கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவையில் உள்ள சுந்தராபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையை தனது சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றியுள்ளார். இதுகுறித்து தனது சமூக தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அன்புமணி,

“தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் பெருங்கனவு உண்டு. அதை பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும், நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் தெரிவித்து வந்திருக்கிறோம்.

அந்த கனவின் சிறு பகுதியை கோவையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி.

கோவையில் உள்ள சுந்தராபுரம் அரசு மேல்நிலை பள்ளியின் வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக அவரது சொந்த செலவில் மாற்றிக் காட்டியிருக்கிறார் அவர்.

அந்த மாதிரி வகுப்பறையில் வகுப்பறை முழுவதும் மனதை இதமாக்கும் வண்ணம் பூசப்பட்டுள்ளது, தரையில் சிமெண்ட் பூச்சூக்கு மாற்றாக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது,

இணையம் சார்ந்த வகுப்புகளை நடத்த 42 அங்குல தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது, அந்த தொலைக்காட்சி கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கணினியையும், தொலைக்காட்சியையும் இணைக்கவும், இயக்கவும் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் மேசையுடன் இணைக்கப்பட்ட தனித்தனி நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு மேசையுடன் சுழலும் எக்சிகியூட்டிவ் நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. வகுப்புகளை நடத்துவதற்காக புரஜெக்டர் வசதி செய்யப்பட்டுள்ளது,

புரஜெக்டர் மூலம் பாடம் நடத்த வெள்ளைத் திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று பட்டியலிட்டுள்ளார்.

patali model anbumani against dravidian model

தொடர்ந்து அன்புமணி, “சாதாரண வகுப்புகளை நடத்த காந்தசக்தி கொண்ட பச்சைப் பலகை நிறுவப்பட்டுள்ளது.

புத்தக அலமாரிகள் இரு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மொத்தம் 500 புத்தகங்கள் வாங்கித் தரப்பட்டுள்ளன. சன்னல்களில் திரை சீலைகள் பொருத்தப்பட்டுள்ளன” என்று அப்பள்ளியில் செய்தவற்றை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வராமலேயே பல சாதனைகளை படைத்துள்ளது.

இப்போது கல்லூரிகளில் கூட இல்லாத வசதிகளுடன் ஒரு ஸ்மார்ட் வகுப்பறையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் அவரது சொந்த செலவில் நிறுவியுள்ளார்.

இது தான் பா.ம.க. 2.0. இதையெல்லாம் சாத்தியமாக்கிய அசோக் ஸ்ரீநிதிக்கு பாராட்டுகள். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதை விட கூடுதல் வசதிகளுடன் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்.

இப்போது இந்த ஸ்மார்ட் வகுப்பறையை வியந்து பார்க்கும் நீங்கள், வெகு விரைவில் திரும்பும் திசையெல்லாம் இத்தகைய வகுப்பறையை பார்ப்பீர்கள்! இது பாட்டாளி மாடல்… பயனளிக்கும் மாடல்” என்று கூறியுள்ளார் அன்புமணி.

வேந்தன்

போன வருடம் ட்விட்-இந்த வருடம் விசிட்: தேவர் குருபூஜையில் மோடி?

அமித் ஷா அறிக்கை: சீமான் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *