நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க சென்ற பேத்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பார்த்து சரியான சின்னத்தில் ஓட்டு போடவேண்டும்’ என இன்று (ஏப்ரல் 19) அறிவுரை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (ஏப்ரல் 19) தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர்.
தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மகள்கள் இருவரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
அப்போது, தேர்தலில் முதல்முதலாக தனது வாக்கினை செலுத்தும் அன்புமணி ராமதாஸின் மூன்றாவது மகள் சஞ்சுத்ராவிற்கு, ராமதாஸ் சில அறிவுரைகளை வழங்கினார்.
சஞ்சுத்ராவிடம், “சரியான சின்னத்தில் பார்த்து ஓட்டினை செலுத்த வேண்டும். ஓட்டு போடுவதில் மிகுந்த கவனம் தேவை” என ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, தங்களது வாக்கினை செலுத்திய பின்னர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மகள்கள் ராமதாஸை சந்தித்தனர்.
அப்போது சஞ்சுத்ரா, “சரியான சின்னத்தில் ஓட்டினை செலுத்தி விட்டேன். மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என ராமதாசிடம் தெரிவித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
1 மணி நிலவரம் : தமிழக வடமாவட்டங்களில் அதிகரிக்கும் வாக்குப்பதிவு!
பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு?: மன்சூர் அலிகான் வாக்குவாதம்!