மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியுடன் தொடங்கியுள்ளது.
2024 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவுடன் தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனையடுத்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிகாலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி இன்று காலை வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையர் ஏற்கெனவே அறிவித்தப்படி தபால் வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியுள்ளது.
முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகளும், அதன்பின் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
SA vs SL : தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!
நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!