நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 2 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. முதலில் ஏப்ரல் 25ஆம் தேதியும், இரண்டாவதாக மே 7ஆம் தேதியும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியது.
நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நடைபெற்று வருகிறது.
இதன்படி, கர்நாடகாவில் இதுவரை பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும், 5 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றியும், 3 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் மாண்ட்யா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி 8,51,881 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரான வெங்கடரமண் கவுடாவை 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேபரேலி… சோனியாவின் மார்ஜினை முறியடித்த ராகுல்
விருதுநகர் : படையெடுக்கும் காங்கிரஸ், தேமுதிக கார்கள்… கவுண்டிங் சென்டரில் பதற்றம்!