டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரானது நவம்பர் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், ஆகிய ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகிறது.
இந்தநிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அலுவலகள் மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பெண்களுக்கு தேர்தலில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் குளிர்கால கூட்டத்தொடரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் தென்னரசு வழக்கு: இறுதி விசாரணை எப்போது?
காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்