நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நான்காவது நாளாக முடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காவது நாளான இன்று கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு துவங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியால் மக்களவை மதியம் 2 மணியிலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
நாடாளுமன்ற முடக்கம்: பாஜக எம்.பி-க்கள் ஆலோசனை!
ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து!