மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடனும் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 34 கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கிய சில மணி நேரங்களில் சமீபத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
“மணிப்பூர் சம்பவம் நாகரிக சமுதாயத்திற்கு வெட்கக்கேடு” – பிரதமர் மோடி
அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணம்